தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து முதல்வர் விளக்கம்: துணை முதல்வர், டிஜிபி உள்ளிட்டோருடன் ஆலோசனை Print News
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் கே.பழனிசாமி சந்தித்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விளக்கினார். உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டார்.
Published On May 24, 2018 11:20 AM
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து முதல்வர், துணை முதல்வர் பேச்சு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடந்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டனர். இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் மத்திய உள்துறை அறிக்கை கேட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ஆளுநர் அழைத்ததன் பேரில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று இரவு 9.25 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு சென்றனர். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோரும் அவர்களுடன் சென்றனர்.

சுமார் 30 நிமிட நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தற்போது அங்குள்ள நிலவரம் குறித்தும் ஆளுநரிடம் முதல்வர், துணை முதல்வர், டிஜிபி ஆகியோர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது
குறி வைத்து சுடும் போலீஸ்... வெளியான பரபரப்பான காட்சிகள்... #Sterlite #PoliceFire | #Exclusive